×

இசை அமைப்பாளர் சித்து குமார் திருமணம்

சென்னை: தமிழில் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த படம், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இதில் இசை அமைப்பாளராக அறிமுகமான சித்து குமார், பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘பேச்சிலர்’, சேரன் நடித்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ உள்பட சில படங்களுக்கு இசை அமைத்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’, சசி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறுகோடி  வானவில்’, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘13’ உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். தவிர, தனி இசை ஆல்பங்களும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சித்து குமாருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி  ராஜி என்பவர், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவருக்கும், சித்து குமாருக்கும் வரும் செப்டம்பர் 9ம் தேதி மதுரையில் திருமணம் நடக்கிறது. இது இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் திருமணம் என்று சித்து குமார் கூறினார்….

The post இசை அமைப்பாளர் சித்து குமார் திருமணம் appeared first on Dinakaran.

Tags : Sidhu Kumar ,CHENNAI ,Siddharth ,GV Prakash Kumar ,Sasi ,
× RELATED கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய...