×

கார்த்திகை

உங்களின் வளர்ச்சி என்பது பாறைக்குள் ஓடும் நீரோட்டம் போல இருக்கும். திடீரென்று பிளந்து நீர் பொங்குவது போல வெளிப்படுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரவலான வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். நீதிமாலை எனும் நூல் ‘‘வார்த்தை அது உடையனாகும். வழக்கறிந்து உரைக்க வல்லன் குணமுடன் கல்வி கற்கும்’’ என்று கூறுகிறது. நல்லது கெட்டது தெரிந்து நியாயத்தை நிலைநாட்டும் நீதிமான்களாக இருப்பார்கள் என்று பேசுகிறது. தீக்கொழுந்துகள் கொத்தாக மேல்நோக்கி எரிவது போன்ற அமைப்பையுடைய நட்சத்திரக் கூட்டங்களை தன்னகத்தே கொண்ட தொகுதியே கார்த்திகை. சூரியன் முழு ஆற்றலோடு இதை ஆளுகிறார். இந்த நட்சத்திரத் தொகுதி ரிஷப ராசிக்குள் ஒளிர்வதால் சுக்கிரனும் தனது ஈர்ப்புத் தன்மையால் இயக்குகிறார். ‘‘எதையும் உடனே அடையவேண்டும் என்ற வேகம் இருக்கும்.

20 வயது இளைஞனாக இருக்கும்போது 50 வயது அமைசர் அடையாளம் காணுமளவிற்கு செல்வாக்கை பெற்றிருப்பீர்கள். இவன் சொன்னா அந்த ஏரியாகாரங்க கேட்பாங்க’’ என்று பிரபலத்தை நோக்கி உங்கள் வாழ்க்கை நகரும். எல்லாத்தையும் சொல்லிகிட்டிருக்க வேணாம் என்று மனைவியிடமே பாதி விஷயத்தை அழுத்துவீர்கள். அதனாலேயே உங்களை நெஞ்சழுத்தக்காரன் என்பார்கள். வியாபாரத்தை ஈடு இணையற்று நடத்துவீர்கள். பல மொழிகளை சரளமாக கற்றுத்தேர்ந்து விடுவீர்கள். அயல்நாட்டுக்கு பயணப்பட்டு அங்கே இருப்பதில் எது பெஸ்ட்டோ, அதை இங்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டே இருப்பீர்கள். பேசும் வார்த்தைகளை கிடுகிடுவென்று பேசுவீர்கள். அதிலேயே எல்லா விஷயத்தையும் புரிய வைத்து விடுவீர்கள்.

அசாதாரணமான ஆளுமைத் திறன் இருக்கும். ஏனெனில். எல்லாமே ராஜ கிரகங்களாக இருப்பதால் ஒன்றையொன்று விஞ்சித்தான் தன்னுடைய திறனை கூட்டிக் கொண்டே இருக்கும். கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு பொதுவாகவே முருகன் தலமாக இருத்தலே நலம் பயக்கும். மண்ணாகவும், பெரிய மலையாகவும் இல்லாது குன்றுபோல இருக்கும் இடத்தில் அருளும் முருகன் தலங்களுக்கு சென்று வாருங்கள். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள திண்டிவனத்திற்கு அருகிலுள்ள மயிலம் முருகனை தரிசியுங்கள்.

Tags : Karthika ,
× RELATED பள்ளி செல்லா குழந்தைகள் 18 பேர் கண்டறியப்பட்டனர் கல்வியை தொடர ஏற்பாடு