×

டெல்லி துணைநிலை ஆளுநர் பதவி விலகக்கோரி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் போராட்டம்

டெல்லி: 1400 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவி விலகக்கோரி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சட்டசபைக்குள் நேற்றிரவில் தாங்கும் போராட்டத்தில் இறங்கினர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை  சேர்ந்த துணை முதலமைச்சர் மணீஷ் சோடியா மீது பல மோசடி வழக்குப்பதிந்துள்ளது அமலாக்கத்துறை. இந்நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவி விலகக்கோரி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சௌரவா பரத்வாஜ் தலைமையில் சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சட்டசபைக்குள் தங்கும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். இதுகுறித்து துருகேஷ் பதக் என்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கூறுகையில், கடந்த 2016ல் காதி கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவராக இருந்த சக்சேனா மீது ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 1400 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஆளுநராக இருக்க தகுதி இல்லை என்றார். எனவே அவர் பதவி விலகும் வரை டெல்லி சட்டசபையில் தங்கும் போராட்டத்தை துவக்கியுள்ளதாக அவர் கூறினார். இதனிடையே டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த துணை முதலமைச்சர் மணீஷ் சோடியா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிந்து உள்ளதால் அவர் பதவி விலகக்கோரி பாஜக எம்.எல்.ஏ,க்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நேற்று இரவெல்லாம் டெல்லியில் அரசியல் பரபரப்பு நிலவியது.              …

The post டெல்லி துணைநிலை ஆளுநர் பதவி விலகக்கோரி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi ,Delhi ,Governor ,Aam Aadmi Party ,Lieutenant Governor ,VK Saxena ,
× RELATED ஸ்வாதி மலிவால் விவகாரம்: ஆம் ஆத்மி புதிய சிசிடிவி காட்சியை வெளியீடு