×

தென் ஆப்ரிக்காவுக்கு இங்கிலாந்து பதிலடி

மான்செஸ்டர்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 151 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 415 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஸ்டோக்ஸ் 103 ரன், போக்ஸ் 113 ரன் விளாசினர். இதையடுத்து, 264 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா 85.1 ஓவரில் 179 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து பந்துவீச்சில் ராபின்சன் 4, ஆண்டர்சன் 3, ஸ்டோக்ஸ் 2, பிராடு 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் செப். 8ம் தேதி தொடங்குகிறது….

The post தென் ஆப்ரிக்காவுக்கு இங்கிலாந்து பதிலடி appeared first on Dinakaran.

Tags : UK ,South Africa ,Manchester ,South African ,England ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...