×

பிசாசு படத்துக்கு யு சான்றிதழ் கேட்டு மேல்முறையீடு

சென்னை: மிஷ்கின் இயக்கிய பிசாசு படம் 8 வருடங்களுக்கு முன்பு வெளியானது. பிரியங்கா மார்ட்டின், நாகா, ராதாரவி நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் 2ம் பாகத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். இதில் ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார், விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப், பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண காட்சியில் நடித்திருப்பதாக கூறப்பட்டது. பின்னர் இந்த படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும், அதற்கு தணிக்கை குழுவின் யு சான்றிதழ் வேண்டும் என்பதால் நிர்வாண காட்சியை நீக்கிவிட்டதாக இயக்குனர் மிஷ்கின் கூறியிருந்தார். இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தின் பயமுறுத்தும் காட்சிகள் அதிகம் இருப்பதாக அவர்கள் அதற்கு அவர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படத்திற்கு யு அல்லது யுஏ சான்றிதழ் கேட்டு மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் வருகிற 31ம் தேதி வெளிவர இருந்த இந்த படம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. படத்திற்கு யுஏ சான்றிதழ்கூட கிடைக்கவில்லை என்றால் ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சியை படத்தில் சேர்ப்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. படம் தமிழுடன் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது….

The post பிசாசு படத்துக்கு யு சான்றிதழ் கேட்டு மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : Pisasu ,Chennai ,Myshkin ,Priyanka Martin ,Naga ,Radharavi ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...