×

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 780 ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை; அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

புதுடெல்லி: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, 780 ராணுவ தளவாட உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராணுவத்திலும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்தாண்டு டிசம்பர் மற்றும் கடந்த மார்ச் மாதம் என 2 முறை ராணுவ தளவாட உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு பாதுகாப்பு அமைச்சகம் தடை விதித்தது.இந்நிலையில், தற்போது 3வது முறையாக, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அதிநவீன ரேடார் அமைப்புகள், சோனார் கருவிகள் உள்பட 780 ராணுவ உதிரிபாகங்களுக்கு இறக்குமதி தடை விதிக்கும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த இறக்குமதி மீதான தடை அடுத்தாண்டு டிசம்பர் முதல் 2028ம் ஆண்டு டிசம்பர் வரை படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த பொருட்களை ரூ.13,000 கோடியில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் உள்நாட்டு நிறுவனங்களுடன் போடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 780 ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை; அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Minister Rajnath Singh ,New Delhi ,Defense Minister ,Rajnath Singh ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...