×

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றப்பின்னணி கொண்ட 422 பேரிடம் விசாரணை; திருந்தி வாழ்வதாக 19 பேர் பிரமாண பத்திரம்

சென்னை: சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 422 ரவுடிகளை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிடித்து விசாரணை நடத்தினர். சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில், சென்னை காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும், கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மேற்பார்வையில் துணை கமிஷனர்கள் கண்காணிப்பில் உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.இதில் தொடர் கொலை, கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் பட்டியல்படி சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த 422 ரவுடிகளை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களில் நீதிமனறத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். மேலும், பிடிபட்ட ரவுடிகளில் 19 பேர் இனி நாங்கள் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்று அந்தந்த துணை கமிஷனர்கள் முன்பு  நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர். மீதுமுள்ளவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்….

The post முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றப்பின்னணி கொண்ட 422 பேரிடம் விசாரணை; திருந்தி வாழ்வதாக 19 பேர் பிரமாண பத்திரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Roudis ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...