×

முக்கிய பிரமுகரை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 5 பேர் கைது

சென்னை: காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆழ்வார் பங்களா பகுதி பின்புறம் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் தற்காலிக ஊழியர் சிவசங்கரன் என்பதும், அவர் போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து, சிவசங்கரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கஞ்சா வியாபாரி புகழேந்தி என்பவருக்கு மாண்டகன்னீசுவரர் தெருவில் வீடு வாடகை எடுத்துக்கொடுத்து, இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கூறினார். சிவசங்கரன் கூறியபடி மாண்டகன்னீசுவரர் கோயில் தெருவில் உள்ள வீட்டை சிவகாஞ்சி போலீசார் சோதனையிட்டனர். அதில், நாட்டு வெடி குண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டுகளையும் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சிவசங்கரனை (28) கைது தொடர் விசாரணை செய்தனர். மேலும், வாடகை வீட்டில் தங்கி நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த சிவசங்கரனின் கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் மறைவிடத்தில் தப்பி ஓடுவதற்கு தயார் நிலையில் இருந்த வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி (21), திருத்தணி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (23), சோமாஸ் (21), லோகேஷ் (22) ஆகிய 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.  பிடிபட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சென்னையில் உள்ள முக்கிய பிரமுகரை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை  காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 1 பைக், 1 கிலோ 300 கிராம் கஞ்சா, தயார் செய்யப்பட்ட நான்கு நாட்டு வெடிகுண்டுகளையும், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். …

The post முக்கிய பிரமுகரை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Alwar Bungalow ,Kanchipuram Sivakanji Kanchipuram ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...