×

கேரளாவில் தொடர்மழையால் தொடுபுழா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழப்பு

இடுக்கி: கேரளாவில் தொடர்மழை காரணாமாக தொடுபுழா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் பருவமழை பெய்துவருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கிழக்கு சரிவு பகுதிகளில் அதிக அளவில் மலை பெய்து வவருகிறது. மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இடுக்கி, கோட்டையம், காசர்கோடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை தொடுபுழாவில் சோமன் என்பவரின் வீடு நிலச்சரிவில் சிக்கியது. அவருடைய வீடு தகர்ந்ததில் அவர் வீட்டில் இருந்த  காணவில்லை என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலையில் அவர்களை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர், பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சோமன் என்பவரின் தாயார் தங்கம்மாள், அவரது மகன் தேவானந்த் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேரை தேடும் பனி தீவிரமாகா நடைபெற்றது. அந்த பகுதிகளில் மழை தொடர்ந்தால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து இருக்க கூடிய காரணத்தால், அந்த பகுதி மக்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் நிலச்சரிவில் சிக்கிய 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்….

The post கேரளாவில் தொடர்மழையால் தொடுபுழா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Ikkki ,Touchpusha ,TouchFon ,Dinakaran ,
× RELATED கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு;...