×

சினி பிட்ஸ்

விழிப்புணர்வு படம் ‘கேங்’விஜய் சேதுபதி போஸ்டர் வெளியிட்டுள்ள படம், ‘கேங்’. இப்படம் 4 சர்வதேச திரைப்பட விருதுகள் வென்றுள்ளது. ‘சாட்டை’ என்.அன்பழகனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தீனதயாளன் இயக்கியுள்ளார். குணா ஹீரோவாக நடித்துள்ளார். இவர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘இரும்புத்திரை’, ‘கே.டி’, ‘காளி’, ‘தமிழ்ப்படம் 2’, ‘ஹீரோ’, ‘விக்ரம்’, ‘தக்ஸ்’ ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தவர். மும்பை தாமினி தேவ் ஹீரோயினாக அறிமுகமாகிறார். பெருமாள் ஒளிப்பதிவு செய்ய, டோனி பிரிட்டோ இசை அமைக்கிறார். இவரது இசையில் ‘கூர்மன்’, ‘J.பேபி’ ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. பெண்கள் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக ‘கேங்’ உருவாகியுள்ளது.தமன் ஸ்டைலில் தர்புகா சிவாஅருள்நிதி நடித்த ‘தேஜாவு’ படத்தை தொடர்ந்து அரவிந்த் னிவாசன் இயக்கும் படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘செம்பி’ ஆகிய படங்களில் நடித்தவர். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ‘கிடாரி’, ‘பலே வெள்ளையத்தேவா’, ‘நிமிர்’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘ராக்கி’, ‘முதல் நீ முடிவும் நீ’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்திருந்த தர்புகா சிவா இசை அமைக்கிறார். இவர் ‘ராஜதந்திரம்’, ‘மோ’, ‘தொடரி’, ‘முதல் நீ முடிவும் நீ’ ஆகிய படங்களில் நடித்தவர். ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தை இயக்கியவர். நடிப்பை விட இசை அமைப்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டதால், நடிக்கும் வாய்ப்புகளை மறுத்துவிட்டார். ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தில் நடித்திருந்த தமன், தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி இசை அமைப்பாளரான பிறகு நடிக்க மறுத்துவிட்டார். தற்போது அவரது ஸ்டைலை தர்புகா சிவா பின்பற்றி வருகிறார்.மாற்றப்பட்ட இந்தி ‘கைதி’தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம், ‘கைதி’. பாடல்கள் இல்லாத, கார்த்திக்கு ஜோடி இல்லாத படமாக உருவானது. இப்படத்தின் 2ம் பாகம் எப்போது உருவாகும் என்று தெரியாத நிலையில், இப்படத்தை இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் 3டியில் ரீமேக் செய்து, வரும் 30ம் தேதி திரைக்கு கொண்டு வருகின்றனர். அஜய் தேவ்கன் தயாரித்து இயக்கி, கார்த்தி நடித்திருந்த வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் நரேன் நடித்திருந்த போலீஸ் கேரக்டரை இந்தியில் தபு நடிக்கும் கேரக்டராக மாற்றியுள்ளனர். பிளாஷ்பேக்கில் அஜய் தேவ்கன் மனைவி வேடத்தில் அமலா பால் நடித்துள்ளார். இந்தி பதிப்புக்காக நிறைய மாற்றங்கள் செய்துள்ள அஜய் தேவ்கன், ராய் லட்சுமியை ஒரு பாடல் காட்சியில் நடனமாட வைத்துள்ளார். தமிழில் ‘கைதி’யை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், கமர்ஷியலுக்காக நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள இந்தி ‘போலா’வை ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. கடற்கொள்ளையனாக ஜெயம் ரவிகடந்த 2015ல் ஜெயம் ரவி, திரிஷா நடித்த ‘பூலோகம்’ படத்தை இயக்கியவர், என்.கல்யாணகிருஷ்ணன். மீண்டும் அவரது இயக்கத்தில் ெஜயம் ரவி நடித்துள்ள படம், ‘அகிலன்’. வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தையும், மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ 2ம் பாகத்தையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள ‘அகிலன்’ படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ஜெயம் ரவியுடன் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். இப்படம் நெய்தல் நிலம் சார்ந்த கதை என்றும், கடற்கொள்ளையனாக ஜெயம் ரவி எதிர்மறை கேரக்டரில் நடிப்பதாகவும், பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தை விரும்பாத டாப்ஸிகடந்த 9 வருடங்களாக பேட்மின்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் ஃபோ என்பவரை காதலித்து வருகிறார், டாப்ஸி. அவரை எப்போது திருமணம் செய்வீர்கள் என்று கேட்டதற்கு பதிலளித்த டாப்ஸி, ‘என் சமகால நடிகர், நடிகைகள் பலர் திடீரென்று திருமணம் செய்து பெற்றோராகி வருகின்றனர் என்பது உண்மைதான். எனது திரையுலகப் பயணத்தின் தொடக்கத்தில் இருந்து நான் காதலிக்கத் தொடங்கினேன். இன்னும் அவரையே காதலிக்கிறேன். இதை ஒப்புக்கொள்ள நான் தயங்கவில்லை. சினிமாவிலும், வாழ்க்கையிலும் எனக்கு யாரும் போட்டி இல்லை. இயல்பாகச் செல்லும் இந்த வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். அதனால்தான் என் காதல் வாழ்க்கை குறித்து மற்றவர்கள் பேசுவதை நான் விரும்பவில்லை. தற்போது ‘டன்கி’ படத்தில் ஷாருக்கானுடன் நடிக்கிறேன். ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். அவர்கள் கூட்டணியில் நான் இருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமை. தினந்தோறும் அவர்களிடம் இருந்து நிறைய புதிய விஷயங்கள் கற்றுக்கொள்கிறேன்’ என்றார்.சமந்தாவுடன் விஜய் மோதல்கடந்த 2016ல் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான படம், ‘பிச்சைக்காரன்’. தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனிக்கு முகம் மற்றும் தாடைப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டு மலேசியா மருத்துவமனையிலும், பிறகு சென்னை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். தற்போது உடல்நிலை தேறி வரும் அவர், வீட்டில் கட்டாய ஓய்வு எடுத்து வரும் நிலையில், ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். எனவே, இப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரும் என்று விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். அன்று சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ என்ற பன்மொழிப் படம் திரைக்கு வருகிறது. மேலும், ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘ருத்ரன்’ என்ற படமும் திரைக்கு வருகிறது….

The post சினி பிட்ஸ் appeared first on Dinakaran.

Tags : Cine Bits ,Vijay Sethupathi ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்