×

நடிகை ரூபிணியிடம் ரூ.1.5 லட்சம் மோசடி

சென்னை: நடிகை ரூபிணியிடம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி 1.5 லட்சத்தை ஒருவர் ஏமாற்றியுள்ள தகவல் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் 80களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரூபிணி. ரஜினியின் ‘மனிதன்’, ‘ராஜா சின்ன ரோஜா’, கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரூபிணி சினிமாவிலிருந்து விலகினார்.

தனது மகன், மகள் மற்றும் குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வருகிறார் ரூபிணி. அவர் ஒரு தீவிரமான ஏழுமலையான் பக்தை. இவரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரவணன் என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியிருக்கிறார். அவரை நம்ப வைக்க பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்களையும் காட்டியிருக்கிறார். அதை நம்பி தனக்கும் திருப்பதியில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு ரூபிணி கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பணம் செலவாகும் என சரவணன் கூறியுள்ளார். தொடக்கத்தில் 77,000 ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பிறகு பல்வேறு காரணங்கள் சொல்லி ரூ.1.5 லட்சம் வாங்கியுள்ளாராம். ஆனால் சொன்னபடி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து கொடுக்காமல் சரவணன் தலைமறைவாகிவிட்டார். இந்த மோசடி தொடர்பாக போலீசில் புகார் அளிக்க ரூபிணி முடிவு செய்துள்ளார்.

Tags : Rupini ,Chennai ,Tirupati Ezhumalaiyan temple ,Rajini ,Raja Chinna ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்