சென்னை: ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ படங்களை கார்த்தி முடித்துவிட்டார். இதையடுத்து, இயக்குனர் கவுதம் மேனன், கார்த்தியை சந்தித்து கதை சொல்லி இருப்பதாகவும், அந்த கதை பிடித்ததை அடுத்து, நடிக்க அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவார் என்றும் தகவல் உள்ளது.
கார்த்தி இதற்கு முன் ‘காற்று வெளியிடை’ என்ற முழு ரொமான்ஸ் படத்தில் நடித்திருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ரொமான்ஸ் கதையில் நடிக்கவுள்ளார். கவுதம் மேனன் கடைசியாக ‘டொமினிக்’ என்ற மலையாள படத்தை மம்மூட்டி நடிப்பில் இயக்கினார். சமீபத்தில் இப்படம் வெளியாகி, படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், தமிழ், மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களை முடித்த பிறகு தான் கவுதம் மேனன் படத்தில் கார்த்தி நடிப்பார் எனக் கூறப்படுகிறது.