×

2 பாகமாக வெளியாகும் வெந்து தணிந்தது காடு

சென்னை: வெந்து தணிந்தது காடு’ படம் 2 பாகங்களாக வெளியாகிறது. சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘வெந்து தணிந்தது காடு’. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க,வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக் கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி திரைக்கு வருகிறது.இந்நிலையில் ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ ஆகிய படங்களின் பாணியில் இந்தப் படத்தை 2 பாகங்களாக உருவாக்குவதாக கவுதம் வாசுதேவ் மேனன் திடீரென்று அறிவித்துள்ளார். முதலில் இந்தப் படத்தை 2 பாகங்களாக இயக்கும் திட்டத்தில் அவர் இல்லையாம். ஆனால், இப்போது படத்தின் நீளத்ைதக் கருதி 2 பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபோல் சிம்பு நடித்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தையும் 2 பாகங்களாக உருவாக்க திட்டமிட்டனர். முதல் பாகமே படுதோல்வி அடைந்ததால், 2வது பாகத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’  படத்தின் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பை கவுதம் வாசுதேவ் மேனன் முடித்துவிட்டார். விரைவில் 2ம் பாகத்துக்கான படப் பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளாராம். முதல் பாகத்தில் கிராமத்தில் இருந்து வரும் இளைஞனாக சிம்பு நடிக்கிறார். பிறகு ரவுடியாக மாறி, அதற்குப் பிறகு மிகப்பெரிய தாதாவாக மாறுவதுதான் கதையாம். இரண்டாவது பாகத்தில் அவர் தாதாவாக மாறுவது  போன்ற சில காட்சிகள் இடம்பெறுமாம். இதுபோல், தற்போது சிம்பு நடித்து வரும் ‘பத்து தல’ என்ற படத்திலும் அவர் தாதா கேரக்டரில் நடிப்பது குறிப்பிடத்தக்கது….

The post 2 பாகமாக வெளியாகும் வெந்து தணிந்தது காடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Simbu ,Siddhi Itnani ,Radhika ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar