×

தொடர் மழையால் நிரம்பிய ஏரிகள்; விவசாயிகள் மகிழ்ச்சி

இடைப்பாடி: இடைப்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையால் பெரிய ஏரி, மோலணி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இடைப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்த தொடர் மழையால், நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பெரிய ஏரி, மோலணி ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இந்த ஏரிகளிலிருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. தண்ணீர் பெருக்கெடுத்து வெளியேறுவதை காண, சுற்றுப்புற பகுதியில் இருந்து மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தொடர் மழையால், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். …

The post தொடர் மழையால் நிரம்பிய ஏரிகள்; விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Lake Molani ,Joy ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...