×

வைத்தி பக்கம் திரும்பிய குக்கர் கட்சி தலைவரின் கோபத்தை பற்றிச் சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வைத்தியானவர் போகும் ஸ்பீடு பற்றிச் சொல்லுங்க… அதுல ஏதாவது பிரச்னை இருக்கா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரர் அவ்வப்போது குக்கர் கட்சிக்கு ஆதரவாக பேசி வருவது அனைவருக்கும் ெதரிந்த கதை. இதனால் தேனிக்காரருடன் குக்கர் கட்சி இணைய வாய்ப்பு உள்ளதாக கட்சிக்குள்ளே பேச்சு ஓடுது. இதற்காக, மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த குக்கர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், சில தினங்களுக்கு முன் வைத்தியானவரை ரகசியமாக சந்தித்தார்களாம். இந்த தகவல், குக்கர் கட்சியின் தலைமைக்கு உடனடியாக தெரியவந்ததாம். நம்முடைய கட்சியில் இருந்து நிர்வாகிகளை ஏன், தேனிக்காரர் அணியினர் இழுக்க வேண்டும் என குக்கர் கட்சி தலைமை கடும் கோபத்தில் இருந்து வருகிறதாம். அவங்களை நம்ம பக்கம் இழுக்க சின்ன மம்மி ஒரு பக்கம், குக்கர் மறுபக்கம்னு ஆள் பிடிக்கும் படலம் ‘ஸ்மூத்தாக’ செல்லும் நிலையில், வைத்தியானவர் ஏன் மூன்று அணிக்குள்ளே குழப்பம் ஏற்படுத்துகிறார். அவரை சும்மா இருக்க சொல்லு, தேனிக்காரரை எப்டியும் வளைத்துவிடுவோம். நாங்கள் ஒன்றான பிறகு வைத்தி இருக்க மாட்டார் என்று  அவர் மீது கடும் டென்ஷனில் இருக்கிறதாம் குக்கர் கட்சி தலைமை… இந்த தகவல் கேள்விப்பட்டு தேனிக்காரர் அதிர்ச்சியில் இருக்கிறாராம். ஏன் வேண்டாத வேலையை வைத்தி பார்க்கிறார் என்று தன் அடிபொடிகளிடம் பேசி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘விட்டாபோதும் இனி ஆர்ப்பாட்டம் தான், போராட்டம் நடத்தி ஜெயிலுக்கு போக முடியாது என்ற நிலைக்கு தாமரை கட்சியின் தலைவர் ஒருவர் இருக்கிறாராமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பாரதமாதா ஆலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற விவகாரத்தில் கைதான மலராத கட்சியின் மாநில துணைத்தலைவர போலீஸ்காரங்க அரஸ்ட் பண்ணினாங்க. ஆனா ஜெயிலுக்கு போக மறுத்து தேம்பி தேம்பி அழுத சமாச்சாரம் நாடறிஞ்சுப்போச்சு. ஒரு பொலிட்டிசியனா இருந்துக்கிட்டு இப்படியா அடம் பிடிக்குறதுன்னு பப்ளிக்கே முகம் சுழிச்சிட்டாங்க. உடலாலும் உள்ளத்தாலும் அவர் நல்லா இருக்காருன்னு டாக்டர்ஸ் சான்றிதழ் கொடுத்தவுடன் மாங்கனி ஜெயிலுக்கு கொண்டுபோயிட்டாங்க. அவருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் எப்படி வெளியே வருவாரு, கைத்தாங்கலா அவரை அழைச்சுட்டு வருவாங்களோன்னு கட்சிக்காரங்க சோகத்துடன் எதிர்பார்த்துக்காத்துக்கிட்டிருந்தாங்க. ஆனா பாருங்க… கட்சிக்காரர்களே திகைக்கும் வண்ணம் ஜெயில்ல இருந்து புள்ளிமான்போல பையை எடுத்துக்கிட்டு துள்ளி குதிச்சுக்கிட்டு வெளியே வந்தாராம். அப்போது தன் அடிபொடிகளிடம் இனிமேல் ஆர்ப்பாட்டம் போன்ற கைது இல்லாத விஷயங்களுக்கு கூப்பிடுங்க… அதிரடினு சொல்லி என்னை உசுப்பேத்தி ஜெயிலுக்கு அனுப்பாதீங்க… நானும் வர மாட்டேன்…’’ என்று சொன்னாராம் விக்கியானந்தா.‘‘வெயிலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்துல தொழிலதிபர்கள் ஐடி ரெய்டால் தூக்கம் தொலைத்து இருக்காங்களாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர், குயின்பேட்ைட, மிஸ்டர்பத்தூர் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தோல் மற்றும் ஷூ கம்பெனிகள் இயங்கி வருகிறது. இதில் முக்கிய பெரிய கம்பெனிகளில் கடந்த 4 நாட்களாக ஐடி அதிகாரிகள் தொடர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 2016 முதல் 2021ம் ஆண்டு வரையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததிலும், பொருட்கள் விற்பனை செய்ததிலும் முறைகேடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் பல கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் உரிமையாளர்களும், அதில் பணிபுரியும் இயக்குனர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் துருவி துருவி ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் ரெய்டால் மற்ற கம்பெனி உரிமையாளர்களும் அலறி உள்ளனர். அடுத்து நம்ப கம்பெனிக்கு வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் உறைந்துள்ளனர். சிலர் முறைகேடாக நடந்த பண பரிவர்த்தனைகளை மூடி மறைக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறார்களாம். இந்த ஐடி ரெய்டால் 3 மாவட்டங்களில் ஷூ மற்றும் தோல் தொழிலதிபர்கள் தூக்கமின்றி தவிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியின் மாஜி ஷாக் அமைச்சருக்கே ஷாக் கொடுக்கும் திண்டுக்கல் இலை தொண்டர்களை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியில் ஒற்றைத்தலைமை அதிகாரத்தை கைப்பற்ற போவது யார் என்ற களத்தில் சேலத்துக்காரருக்கும், தேனிக்காரருக்கும் இடையே ஆதரவாளர்களை திரட்டுவதில் ஒரு பக்கம் போட்டா போட்டி நிலவி வருகிறது. தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பூட்டு மாவட்டத்தில் இலைக்கட்சி சின்னத்தின் முதல் வெற்றி வேட்பாளரின் மறைவிற்கு போட்டிப்போட்டு மாலை அணிவித்து, தாங்கள்தான் உண்மையான இலைக்கட்சியினர் என கூறிக்கொண்டு மாஜி மந்திரிகள் இறுதிச்சடங்கு வரை முடியும் வரை உடனிருந்தனர். ஆனால், கட்சியின் மிக முக்கியமானவரின் மறைவுக்கு, சேலத்துக்காரர் அஞ்சலி செலுத்த வராதது, மாவட்டத்தில் இலைக்கட்சி நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை சாக்காக கொண்டு தேனிக்காரரின் தீவிர ஆதரவாளர்கள், மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை தேடி கண்டுபிடித்து, தங்களின் அணிக்கு இழுத்து வருகின்றனராம். உஷாரான மாஜி ஷாக் துறை அமைச்சர், தேனிக்காரர் பக்கம் செல்பவர்களிடம் செல்போனில் பேசி, ‘எதையாவது சொல்றாங்களேன்னு ஏமாந்து போயிடாதீங்கப்பா. நம்ம பக்கம் நல்ல தீர்ப்பு வரும்பா. பொறுமையா இருங்கப்பா…’’ என்று தொண்டர்கள் கொடுத்த ஷாக்கில் இருந்து இன்னும் அவர் மீளவே இல்லையாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post வைத்தி பக்கம் திரும்பிய குக்கர் கட்சி தலைவரின் கோபத்தை பற்றிச் சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Vaidhi ,Kukar ,wiki ,Yananda ,Uncle ,Peter ,Thenikarkar ,Vaidi ,wiki Yananda ,
× RELATED எம்பி தேர்தல் நடக்க இருக்கும்...