×

எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தல்

கும்மிடிப்பூண்டி: எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சூளூர்பேட்டை, வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் மின்சார ரயிலில் கஞ்சா கடத்துவதாக கும்மிடிப்பூண்டி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் ஒவ்வொரு மின்சார ரயிலாக ஏறி நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், காக்கிநாடாவில் இருந்து சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்துக்கு வந்து நின்றது. அப்போது அந்த ரயிலை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து  ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தார். அதில் 9வது பெட்டியில் ஆங்காங்கே 15 டேப் சுத்தப்பட்ட கவர்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கஞ்சாவை கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில் சுமார் 25 கிலோ  கஞ்சா இருந்தது. மேலும் கஞ்சாவை கடத்தி வந்தவர் போலீசாரை கண்டதும் அப்படியே விட்டுச் சென்றிருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Sulurpet, Velachery, Chennai Central ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...