×

பங்குச் சந்தையில் கிரகங்களின் விளையாட்டு

புதன் தசை

நவகிரகங்களில் சுப கிரகங்களான புதன், குரு பகவான் மற்றும் சுக்கிரன் ஆகியோர் ஒருவருக்கொருவர் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றோ நட்சத்திர ரீதியான தொடர்புகள் ஏற்பட்டோ காணப்பட்டால் ஜாதகர் இந்த தசாபுக்தி காலங்களில் அன்றாடம் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தொடர்புடைய துறைகளில் எவ்வித அச்சமுமின்றி முதலீடு செய்யலாம். இதேபோன்று குரு பகவானுடன் ஜாதகத்தில் எவ்வகையிலாவது தொடர்பு கொண்ட புதன் பகவானின் தசா புக்தி காலங்களில் தொலைபேசி துறைதனில் முதலீடு செய்யலாம். ரப்பர் சம்பந்தப்பட்ட துறைதனில் முதலீடு செய்ய விரும்புவோர் வலுவுடன் காணப்படும் சனீஸ்வரன், தன் பகவானுடன் கொண்ட தொடர்பினை வைத்து பரிசீலித்து இந்தத் துறையில் முதலீடு செய்யலாம்.

கேது தசை

கேது தசை நடைபெறுபவர்கள் செவ்வாய்க்கு என்னென்ன பொருள்கள் சொல்லப்பட்டுள்ளனவோ? அதையே ஜோதிடரின் ஆலோசனையுடன் சேர்த்துக் கொள்ளலாம். முக்கியமாக பாய்சன் மெடிசின் போன்றவற்றில் கேது தசை நடைபெறும்போது செவ்வாய் கிரகத்தை அனுசரித்து முதலீடு செய்து லாபம் பெறமுடியும்.

சுக்கிர தசை

சுக்கிர பகவானும், சனி பகவானும் இணைந்தோ பார்வை பெற்றோ, அல்லது இவர்களின் நட்சத்திரங்கள் தொடர்பு பெற்றோ காணப்படும்போது    ஜாதகர்
லக்கேஜ் சூட்கேஸ் பெட்டி போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இதில் சுக்கிரனும் சனியும் இணைந்தோ அல்லது பார்வை பெற்றோ நட்சத்திர தொடர்பு பெறுவது பருத்தி போன்றவற்றில் முதலீடு செய்ய ஏதுவாகும். சுக்கிரன், செவ்வாய், சனி போன்ற கிரகங்களுடன் இணைந்தோ பார்வை பெற்றோ நட்சத்திர தொடர்புகள் பெறும்போதோ, கட்டிட தளவாடங்கள், எந்திர தளவாடங்கள் மற்றும் உணவு ஆகியவை லாபம் தருவதாகும்.

வாகனக்காரகனாகிய சுக்கிரன் கருமை நிற அதிபதியான சனிபகவானுடன் இணைவது நட்சத்திர தொடர்பு, இதுபோன்ற அமைப்பு சைக்கிள், டயர், ஷிப்பிங் போன்றவற்றில் முதலீடு செய்வதைக் குறிக்கும். சுக்கிரன், புதன், சூரியன் என்று இரண்டு மூன்று கிரகங்களுடன் சேரும்போதும் நட்சத்திரத் தொடர்பு பெறும்போதும் பெயின்ட், ஆட்டோ மொபைல் போன்றவைகளில் லாபம் பெறலாம். சாயா கிரகமாகியதும், புகை கிரகமாகிய ராகு ஆடம்பரகாரகன்
சுக்கிரனுடன் சேர்ந்தே நட்சத்திர தொடர்பு பெற்றோ இருந்தால் சிகரெட், புகையிலை போன்றவற்றில் முதலீடு செய்யவும்.

இதுவரை ஒவ்வொரு தசாபுக்தி காலங்களிலும் கிரகங்களின் தொடர்புக்கு ஏற்றவாறு எந்தெந்த துறைதனில் முதலீடு செய்து லாபம் ஈட்ட முடியும் என்பது குறித்து ஆராய்ந்தோம். இதில் முக்கியமாக, ஒவ்வொரு கிரகத்திற்கும் நூற்றுக்கணக்கான காரகத்துவங்கள் இருந்தபோதிலும் நான் சில முக்கியமான காரகத்துவங்களை அடிப்படையாகக் கொண்டும் பங்கு மார்க்கெட்டில் பதிவு செய்துள்ள நிறுவனங்களை கருத்தில் கொண்டும்தான் எனது தொகுப்பினை இங்கு எழுதியுள்ளேன். எனினும், ஒவ்வொரு நபரின் ஜாதகத்திலும், மேற்கூறிய தசாபுக்தி காலங்களில் ஏனைய கிரகங்கள் அமரும் ராசிகள், வீச்சுகள், பலம் மற்றும் கோள் சாரம் ஆகியவற்றால் ஜாதகத்தின் தன்மையும் பலனும் மாறுபடும். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன்னர் ஒரு ஜோதிடரை அணுகி வெகுவாகத் தெரிந்து கொண்டு பிறகு செயல்படுவது உத்தமம்.

(விளையாட்டு தொடரும்)

டாக்டர்: நெல்லை வசந்தன்

Tags : planets ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்