×

சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் இதுவரை நஷ்டஈடு வழங்காததால் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த வில்லிவலம் ஊராட்சியை சேர்ந்தவர் சின்னத்தம்பி, இவர் கடந்த 2018ம் ஆண்டு அய்யம்பேட்டை பகுதியில் நடந்த விபத்தில் அரசு பேருந்து மோதி பலியானார். அதேபோன்று, காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் ஏற்பட்ட சாலை விபத்தில் முத்து என்பவர் அரசு பேருந்து மோதி இறந்து விட்டார். இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருவருக்கும் அசலும் வட்டியும் சேர்த்து சுமார் ரூ.34 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு கடந்த 2020ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை அரசு போக்குவரத்துக கழகம் நிறைவேற்ற தவறியதால் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளங்கோவன் இரண்டு அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின்பேரில் வேலூர் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இரண்டு பேருந்துகளை சிறைபிடிக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதிக்கப்பட்ட மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது….

The post சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Jafti ,Kanchipuram ,Government Transport Corporation ,
× RELATED அரசு போக்குவரத்து கழக கிளையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு