×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி ஆறுமுகசாமி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான 590 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுக சாமி தாக்கல் செய்தார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த அறிக்கை தக்கல் செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு, 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது. 2017-ம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்ட போது 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 147 பேரிடம் விசாரணையானது நடைபெற்று கொண்டிருந்த போது விசாரணை அறிக்கை தொடர்பாக மருத்துவ அறிக்கைகள் தவறாக மொழியாக்கம் செய்யப்படுவதாக அப்பலோ நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தான் காரணமாக இடைக்கால தடை விதிக்கப்பட்டுது மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட பின்னரே எய்ம்ஸ் மருத்துவக்குழுவினருடன் மீண்டும் விசரணையானது நடைபெற்றது. அப்போது, விசாரணைக்கு காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இளவரசு ஆகியோரிடமும் ஆணையம் இறுதி கட்ட விசாரணையை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து விசாரணை ஆணையம் இறுதி அறிக்கையை தக்கல் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டதாலும், எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கையை தக்கல் செய்ய கால தாமதம் செய்ததன் காரணமாக 14-வது முறையாக காலநீட்டிப்பு செய்யப்பட்டு ஆகஸ்ட் 24-ம் தேதி இறுதி அறிக்கை கொடுக்குமாறு ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து கடந்த 22-ம் தேதியே அறிக்கை இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், அறிக்கையை தாக்கல் செய்வதற்கான நேரம் ஒதுக்கப்படவேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி முதலமைச்சர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படியில், 3 நாட்கள் முதலமைச்சர் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் இன்று நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி அளித்தார். எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அளிக்க பட்ட சிகிச்சையில் எந்தவிதமான தவறுகளும் இல்லை என அறிக்கை கொடுத்துள்ளது. …

The post முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி ஆறுமுகசாமி appeared first on Dinakaran.

Tags : Justice ,Arumugasamy ,Chief Minister ,Jayalalithaa ,Justice Arumuga Samy ,MK Stalin ,Jayalalitha ,Dinakaran ,
× RELATED ஜாமினை நீட்டிக்கக் கோரிய கெஜ்ரிவால்...