×

காரியாபட்டி பேரூராட்சியில் கழிவுநீர் ஓடையில் தூர்வாரும் பணி

காரியாபட்டி: காரியாபட்டி பேரூராட்சியில், கழிவுநீர் ஓடையான நீர்வரத்து ஓடையில் தூர்வாரும் பணி நேற்று நடைபெற்றது. காரியாபட்டி பேரூராட்சி 10வது வார்டில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கரிசல்குளம் கண்மாய் நீர்வரத்து கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பள்ளத்துப்பட்டி அரசு மருத்துவமனை பகுதி குடியிருப்பு மற்றும் என்.ஜி.ஓ நகர் உள்ளிட்ட பகுதிகளின் ஒட்டுமொத்த கழிவுநீரும் செல்கிறது. நீண்ட காலமாக தூர்வாரப்படாததால் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து குளம் போல தேங்கி நின்றது. இதில், கொசுக்கள் உருவாகி சுகாதாரக்கேட்டை உருவாக்கியது. இந்த கழிவுநீரோடையை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, காரியாபட்டி பேரூராட்சி திமுக சேர்மன் செந்தில், கழிவுநீர் ஓடையில் ஜேசிபி மூலம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், 6வது வார்டு கவுன்சிலர் சங்கரேஸ்வரன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ராம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்….

The post காரியாபட்டி பேரூராட்சியில் கழிவுநீர் ஓடையில் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Kariyapatti Purchasi ,Gariyapatti ,Gariyapatti Municipality ,Gariyapatti Municipality 10th Ward ,Garyapatti ,Dinakaran ,
× RELATED கோயிலில் பங்குனி திருவிழா