×

மேஜிக் ரீல் சுயாதீன பட விழா

சென்னை: சர்வதேச விருது பெற்ற ‘மை சன் இஸ் கே’ படம் மூலம் அறியப்பட்ட சுயாதீன திரைப்பட இயக்குநர் லோகேஷ் குமார், சவுண்ட் பார்ட்டி ஸ்டூடியோஸ், தி டிரீம் கிளப் நிறுவனங்களுடன் இணைந்து மேஜிக் ரீல் திரைப்பட விழாவைத் நடத்தி வருகிறார். இப்போது நடத்தப்பட்ட விழாவில் பல்வேறு படங்கள் திரையிடப்பட்டன. இதில் சிறந்த குறும்படமாக, விக்னேஷ் பரமசிவம் இயக்கிய ‘அன்பிற்கு எண் ஒன்றை அழுத்தவும்’ தேர்வானது. லைஃப் ஆஃப் பழம் என்ற படத்தை இயக்கிய ஸ்ரீனி சிறந்த இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டார். பார்பி கேர்ள் படத்தில் சிறந்த திரைக்கதை எழுதிய மிதுனும், சிறந்த நடிகராக லைஃப் ஆஃப் பழம் படத்தில் நடித்த விஜய்-யும், சிறந்த நடிகையாகக் கன்னி படத்தில் நடித்த மிருதுளாவும் தேர்வாகினர். அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இயக்குனர் லோகேஷ் குமார் பேசும்போது, ‘‘இது ஆர்வமுள்ள சுயாதீன திரைப்பட இயக்குனர்களை ஆதரித்து ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகும். மேஜிக் ரீல் பட விழாவை தேசிய அளவில் கொண்டு செல்வதே நோக்கமாகும்’’ என்றார்.

Tags : Magic Reel Independent Film Festival ,Chennai ,Lokesh Kumar ,Magic Reel Film Festival ,Sound Party Studios ,The Dream Club.… ,
× RELATED இலங்கை தமிழர்கள் உருவாக்கிய படம் தீப்பந்தம்