×

சென்னையில் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் அரசு ஊழியர்-ஆசிரியர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: வருகிற செப்டம்பர் மாதம் 10ம் தேதி சென்னையில் நடைபெறும் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் (ஜாக்டோ-ஜியோ) மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் வாழ்வாதார மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம் தெரிவித்தார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ-ஜியோ சார்பில் முந்தைய ஆட்சியின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்திய போதும், எங்களது மனுவை கூட பெறவில்லை. தற்போதைய திமுக அரசு ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் தொடர்பாக 3 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. எங்களது கோரிக்கை மனுவையும் முதல்வரிடம் நேரடியாக வழங்கி உள்ளோம்.முந்தைய ஆட்சியின்போது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தியபோது, குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. அதனால் போராட்டங்களை வீரியத்துடன் நடத்தினோம். தற்போதைய முதல்வர் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருக்கிறார். ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னையில் செப்டம்பர் 10ம் தேதி மாநாடு நடத்த உள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்….

The post சென்னையில் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் அரசு ஊழியர்-ஆசிரியர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Government Employees-Teachers Conference ,Chennai ,Government Employees-Teachers ( ,JACTO-JEO) Conference ,
× RELATED 101வது பிறந்தநாள் கொண்டாட்டம் கலைஞர்...