×

ஒன்றிய அரசு வழங்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்.30ம் தேதியுடன் நிறுத்தம்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு  மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை  மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனாவில்  இருந்து முழுமையாக வெளியில் வந்து விட்டோம்  என்று சொல்ல முடியாது.  அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஒரு லட்சம் என்ற கணக்கில்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா உள்ளிட்ட  மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. மகிழ்ச்சியான செய்தியாக தமிழகத்தை  பொறுத்தவரையில் 500 பேருக்கும் கீழ்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்குவதை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்கிறது. தனியார் மருத்துவமனைகளில்  கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ளும் சூழல் இருப்பதால், மக்கள் தற்போதே  பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும். இரண்டு  வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடந்து வந்த கொரோனா தடுப்பு சிறப்பு  முகாம் அடுத்த மாதம் முதல் வாரம்தோறும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்….

The post ஒன்றிய அரசு வழங்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்.30ம் தேதியுடன் நிறுத்தம்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Minister ,M. Subramaniam ,CHENNAI ,Jayagopal Karodia Government Girls High School and Government Model High School ,Saitappettai, Chennai ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் முறைகேடு சட்டபூர்வமான...