×

11 முன்னோடி விவசாயிகளுக்கு ரூ.70 லட்சம் கிரயத் தொகைக்கான ஆணை; கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்  விவசாயிகளோடு கலந்துரையாடி, 161 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு,  உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2021-22-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு 1,75,000 மெட்ரிக் டன்கள் இலக்கு வழங்கப்பட்டு, 1,87,298 மெட்ரிக். டன்கள் கரும்பு அரவை செய்யப்பட்டு இலக்கை விட கூடுதலாக 12,298 மெட்ரிக் டன் அரவை செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், அரசு உத்தரவின்படி திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை நிறுத்தம் செய்யப்பட்டபிறகு, அறுவடை செய்யப்படாமல் நிலுவையிலிருந்த பதிவு செய்த கரும்பு விவசாயிகள் பாதிக்காத வகையில் அறுவடை செய்து 23,326 மெட்ரிக் டன் கரும்புகள் மாவட்ட நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையின் மூலம்,  இதர கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி அரவை செய்து 510 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.09.12.2021 முதல் 22.02.2022 வரை 1,13,881 மெ.டன் கரும்பு சப்ளை செய்த 954 விவசாயிகளுக்கு கரும்பு கிரையத் தொகை ரூ.22.77 கோடி கடந்த பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டது.  அதே போல் வழங்கப்படாமல் இருந்த  டன் ஒன்றுக்கு ரூ.755 வீதம் நிலுவையிலிருந்த ரூ.8.60 கோடியும், 23.02.2022 முதல்; 20.04.2022 வரை 73,417 மெ.டன் கரும்பு சப்ளை செய்த 666 விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2755 வீதம் ரூ.20.22 கோடியும் ஆக மொத்தம் ரூ.28.82 கோடி கரும்பு கிரையத் தொகையினை தமிழக முதல்வர் உத்தரவின்படி நிலுவையிலிருந்த அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் அவரவர் வங்கி கணக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன் அடையாளமாக நேற்று 11 முன்னோடி விவசாயிகளுக்கு கரும்பு கிரைய தொகை ரூ.70.75 இலட்சத்திற்கான ஆணை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அரவைக்கு சப்ளை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே நேரத்தில் கரும்பு கிரையத் தொகை முழுவதையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலாண்மை இயக்குநர் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அறிவுறுத்தினார். மேலும் திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவைக்கு கரும்பு விநியோகம் செய்த 1620 விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கிரயத் தொகை ரூ.28.82 கோடி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து 11 முன்னோடி விவசாயிகளுக்கு கலெக்டர் ரூ.70.75 இலட்சம் கிரயத் தொகைக்கான ஆணைகளையும், கூட்டுறவுத்துறை சார்பாக 6 விவசாயிகளுக்கு ரூ.6.36 இலட்சம் மதிப்பீட்டில் விவசாய நெற்பயிர் கடன் பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  சு.அசோகன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) எல்.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்  பா.ஜெயஸ்ரீ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  வி.எபினேசன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்….

The post 11 முன்னோடி விவசாயிகளுக்கு ரூ.70 லட்சம் கிரயத் தொகைக்கான ஆணை; கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Agriculture and Farmers Welfare Department ,District ,Dinakaran ,
× RELATED உயர் விளைச்சல் நெல் விதை வழங்க ரூ.8.60 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அறிவிப்பு