×

2018 இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன்

சென்னை: மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம், ‘2018’. இதை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கினார். இதை தொடர்ந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமான அவர், அப்படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ ஆகிய படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன், அடுத்து ‘குட் நைட்’ பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இப்படங்களை முடித்துவிட்டு, ஜூட் ஆண்டனி ஜோசப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

Tags : Sivakarthikeyan ,Jude Antony Joseph ,Leica Productions ,AGS Entertainment ,
× RELATED இலங்கையில் சிக்கிய சிவகார்த்திகேயன் படக்குழுவினர்: பாஸ்போர்ட் பறிமுதல்