×

245 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; திருவள்ளூர் எம்எல்ஏ வழங்கினார்

திருத்தணி: திருத்தணி அடுத்த திருவாலங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் அருள் அரசு தலைமை தாங்கினார் . ஒன்றியக்குழு துணைத்தலைவர் சுஜாதா மகாலிங்கம். மாவட்ட கவுன்சிலர் விஜயலட்சுமி சரவணன். ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமேஷ் பட்டம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், திருவாலங்காடு பள்ளி மாணவ,மாணவிகள் 115 ேபருக்கும் கனகம்மா சத்திரத்தில் 130 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். பின்னர் அவர் பேசியது, இன்றைய காலகட்டத்தில் படித்தால்தான் முன்னேற்றம் காண முடியும். நீங்கள் படித்து பட்டம் பெற்றால் உங்கள் வாழ்க்கையில் சிறப்பு அடையலாம். செல்போன்கள் எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்து நிறைந்துள்ளது. எனவே அனைவரும் நல்லதுக்கு மட்டுமே செல்போன்களை பயன்படுத்துங்கள். மத்திய அரசு நிதியை வழங்காவிட்டாலும் நமது தமிழக முதல்வர் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி தொடர்ந்து இலவச சைக்கிள் வழங்குவதை நிறுத்தாமல் வழங்கி இருக்கிறார் . இதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். என்று இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கூளூர் எம். ராஜேந்திரன் , மகாலிங்கம், களாம்பாக்கம் பன்னீர்செல்வம் , ஒன்றிய கவுன்சிலர் ஜெயபாரதி தலைமையாசிரியர்கள் சுஜாதா, குணசேகரன், ஒன்றிய நிர்வாகிகள் குமரவேலன், பூக்கடை கோபி, குமார், அர்ஜுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post 245 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; திருவள்ளூர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur MLA ,Thiruthani ,Tiruvalangadu Government Higher Secondary School ,Kanakammasatram Government Higher Secondary School ,Tiruvallur MLA ,
× RELATED திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில்...