2021 புத்தாண்டு பொதுப் பலன்கள்

கணித்தவர்: ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

2021 ஆங்கில புத்தாண்டு சார்வரி வருடம் மார்கழி மாதம் 17ஆம் நாள் 1.1.2021 வெள்ளிக்கிழமை, துவிதியை திதி, பூசம் நட்சத்திரம், கடகம் ராசியில் புத்தாண்டு

தொடங்குகிறது. சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு, சனி, புதன் மூவரும் இருப்பது சிறப்பான அமைப்பாகும். செவ்வாய் சந்திரனுக்கு தசம கேந்திரத்தில் ஆட்சிப் பலம் பெற்று இருக்கிறார். லாப ஸ்தானத்தில் ராகு இருப்பதும் சிறப்பாகும். உலக அரங்கில் இந்தியாவின் கை ஓங்கும். மக்களிடையே ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் மழைப் பொழிவு அதிகம் இருக்கும்.

மத்திய அரசின் கை ஓங்கும். பல புதிய திட்டங்கள் பயன்பாட்டிற்கு வரும். வியாபாரிகள், விவசாயிகள் பலன் அடைவார்கள். நீண்டகால நதிநீர்ப் பங்கீடு பிரச்னைகள் முடிவுக்கு வரும். மக்களிடையே ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில், புண்ணிய தலங்களில் கூட்டம் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு பூமிக்கு அடியில் கடலில் புதையல் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறை படிப்படியாக வளர்ச்சி அடையும்.

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் தொழில் கை கொடுக்கும். தகவல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி யடையும். ராணுவம் அதிக பலத்துடன் செயல்படும். தீவிரவாத, பிரிவினைவாத இயக்கங்களின் பலம் குறையும். வெளிநாட்டு வாணிபம், ஏற்றுமதி, இறக்குமதி வளர்ச்சியடையும். பொதுவாகவே பிரதான கிரகங்கள் எல்லாம் பெயர்ச்சி அடைந்துள்ளதால் எல்லாப் பிரச்னைகளுக்கும் நல்ல விடிவு காலம் பிறக்கும். நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்ல ஏற்றங்கள், மாற்றங்கள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்தை தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்கி பிரார்த்திக்கிறேன்.

Related Stories:

>