×

சோழவந்தானில் 1500 ஆண்டுகள் பழமையான ஜெனக நாராயண பெருமாள் கோயில் புனரமைக்கப்படுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துமாறு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம், சோழவந்தானில் புகழ்பெற்ற வைணவ தலமான ஜெனக நாராயண பெருமாள் கோயில் உள்ளது. கிபி 5ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையது. சுமார் 1,500 பழமையான இக்கோயிலில் மூலவராக  தேவி, பூதேவி சமேதராக நாராயண பெருமாள் உள்ளார். இப்பகுதியின் பெரும்பாலான திருமணங்கள் இக்கோயிலில் தான் நடக்கும். வைணவ ஸ்தலங்களுக்குரிய பிரமோத்ஸவ விழா, சித்ரா பௌர்ணமி கள்ளழகர் விழா, சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட அனைத்து விழாக்களும், பூஜைகளும் இங்கு விமரிசையாக நடைபெறும். மேலும் இக்கோயிலில் உள்ள மகாலெட்சுமிக்கு வெள்ளிக்கிழமை பூஜையும், ஜெய வீர ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை பூஜையும் கூடுதல் சிறப்பம்சமாகும். இங்கு கற்கலான சுவற்றில் உள்ள வட்டெழுத்துக்கள் இக்கோயிலின் தொன்மையை வெளிப்படுத்துகிறது. இத்தகைய சிறப்பான கோயிலுக்கு கடந்த 16.03.2003ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 19 ஆண்டுகளாகியும் இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.எனவே இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திமுக வழக்கறிஞர் தியாகராஜன் கூறுகையில், ‘சோழவந்தானின் தொன்மையை இக்கோயில் மூலம் அறியலாம். மதுரையை போல் இங்கு நடைபெறும் கள்ளழகர் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து 19 ஆண்டுகளானதால் பல இடங்களில் சிறு விரிசல்களும், கோபுர பதுமைகள் சிதிலமாகியும் உள்ளது. எனவே கோயிலை பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும். வட்டெழுத்துக்கள் இடம் பெற்றுள்ள கல்வெட்டுகள் தொன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும். பல ஏழைகளின் திருமணம் இங்கு தான் நடைபெறுகிறது. ஆனால் திருமணம் முடிந்த பின் உணவு வெளியில் உள்ள ஹோட்டலில் போய் தான் சாப்பிட வேண்டும். எனவே இக்கோயில் வளாகத்தினுள் ஒரு திருமண மண்டபம் கட்டினால் ஏழைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோயில் நிர்வாகத்திற்கும் வருவாய் கிடைக்கும். இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பல முறை பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியில் பல கோயில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் 1500 ஆண்டு பழமையான இக்கோயிலையும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரை வேண்டி கேட்டு கொள்கிறோம்’ என்றார்.a…

The post சோழவந்தானில் 1500 ஆண்டுகள் பழமையான ஜெனக நாராயண பெருமாள் கோயில் புனரமைக்கப்படுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Janaka Narayana Perumal Temple ,Solavantan ,Cholhavandan ,Genaka Narayana Perumal Temple ,Kumbabhishekam ,Madurai District ,Sozhavandan ,Solhavandan ,
× RELATED சோழவந்தானில் கிருஷ்ணர், ராதை திருக்கல்யாணம் பக்தர்கள் திரண்டனர்