×

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13ம் தேதி மரணமடைந்தார். மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமீன் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், பள்ளி தொடர்பான சிசிடிவிகளின் பதிவு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 38 நாட்களுக்கு விசாரணை நடைப்பெற்று உள்ளதாகவும், மேலும் காவலில் வைத்தி விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஜி. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்? என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்விட்டார். இந்நிலையில், வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, மாணவியை படி என்று சொல்லி ஆசிரியர் வற்புறுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார்; அது பாலியல் வன்கொடுமையோ, கொலையோ இல்லை. எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறினார். மேலும், 2 பிரேத பரிசோதனையிலும் எந்த முரண்பாடும் இல்லை. அதேபோல் ஜிம்பர் மருத்துவமனையின் அறிக்கையும் பெறப்பட்டது. அதிலும் எவ்வித முரண்பாடும் இல்லை. என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், ஏற்கெனவே பள்ளி தாளாளர் மீது பல வழக்குகள் உள்ளது. இதேபோல் 2 தற்கொலைகள் அப்பள்ளியில் நடந்துள்ளது. இதனால் தான் அவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே அவர்களுக்கு ஜாமீன் வாழக்கூடாது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிபந்த ஜாமீன் வழங்க உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் அதுகுறித்த விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் கூறினார்.  …

The post கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Kallakurichi ,Chennai ,Cuddalore ,Periyanesalur ,Kaniyamur, Kallakkurichi District ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...