மும்பை: காதலர் விஜய் வர்மாவை தமன்னா பிரிந்தது ஏன் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்தது. காதலை பொதுவெளியில் அறிவித்துவிட்டாலும் தங்களது திருமணம் குறித்து எதையும் முடிவெடுக்காமல் இருந்தார்கள். அதேசமயம் விரைவில் அவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் காதல் பிரேக் அப் ஆகிவிட்டது உறுதியானது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அவர்கள் தங்கள் காதலை முடித்துக்கொண்டதற்கு தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதாவது விரைவில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட தமன்னா நினைத்தாராம். திருமணத்துக்கு பிறகும் கரீனா கபூர், கியரா அத்வானி, தீபிகா படுகோன் நடிக்கிறார்கள். அதுபோல் தானும் நடிக்கலாம் என தமன்னா விரும்பியுள்ளார். ஆனால் விஜய் வர்மா, இப்போதைக்கு திருமணம் செய்ய முடியாது என்றும் 2 ஆண்டுகளுக்கு பிறகே திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அதற்கு பிறகு சினிமாவில் நடிக்கக் கூடாது என்றும் தமன்னாவுக்கு கண்டிஷன் போட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த தமன்னா, விஜய் வர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகே இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.