×

திருமண விழாவில் 3 குழந்தை உட்பட 5 பேர் தீயில் கருகி பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்

மொராதாபாத்: மொராதாபாத்தில் நடந்த திருமண விழாவில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரும் திருமண நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக மூழ்கி இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிக்கி ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இரண்டு பெண்களும், மூன்று குழந்தைகளும் பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள், சில மணி நேர போராட்டங்களுக்கு மத்தியில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. மேலும் தீயில் சிக்கிய 7 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் உத்தரபிரதேசத்தில் ெபரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்….

The post திருமண விழாவில் 3 குழந்தை உட்பட 5 பேர் தீயில் கருகி பலி: உத்தரபிரதேசத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Moradabad ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில்...