×

நிதி நிறுவனம் நடத்தி ₹ 1.85 கோடி மோசடி: தம்பதி அதிரடி கைது

கோவை: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (42). இவர் மனைவி சாரதா (35). இவர்கள் நீலகிரி, கோவை, சேலம், ஓசூர், பெங்களூர் உட்பட பல்வேறு பகுதியில் நிதி நிறுவனம் நடத்தினர். ஆன்லைனில் தங்களது நிறுவனத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டனர். பணம் முதலீடு செய்தால் 8 முதல் 12 சதவீத வட்டி வழங்கப்படும். 2 ஆண்டில் 50 சதவீத பணம் திரும்ப வழங்கப்படும். இது தவிர ஊக்க தொகையும் வழங்கப்படும் என இந்த நிறுவனத்தினர் அறிவித்தனர். இவர்களிடம் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பணத்தை முதலீடு செய்தனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவர் 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தார்.  இவரை போல் மேலும் 66 பேருக்கு பணம் வாங்கி வட்டி, முதலீட்டு தொகை வழங்காமல் நிதி நிறுவனம் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சபரிநாதன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் 1.85 கோடி ரூபாய்க்கு இவர்கள் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜ், சாரதா ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். துரைராஜ் ஏற்கனவே பெங்களூரில் நிதி நிறுவனம் நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களிடம் 5கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. பெங்களூர் போலீசார் இவரை கைது செய்தனர். சிறை சென்று ஜாமீனில் வந்த பின்னரும் திருந்தாமல் அதே மோசடி தொழிலை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. …

The post நிதி நிறுவனம் நடத்தி ₹ 1.85 கோடி மோசடி: தம்பதி அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Durairaj ,Kudalur ,Nilgiri district ,Sarada ,Nilgiris, Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி