×

புதுவண்ணாரப்பேட்டையில் நன்னடத்தை விதி மீறிய பெண்ணுக்கு சிறை

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் நன்னடத்தை விதி மீறி சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை 305 நாள் சிறையில் அடைக்க துணை ஆணையர் உத்தரவிட்டார். சென்னை புதுவண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பு, ஜே பிளாக்கை சேர்ந்த பெண் பிரேமா (42). இவர், அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 23ம் தேதி இனி குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டியிடம் பிரேமா நன்னடத்தை பிரமாண பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.அதன்பிறகும் அப்பகுதியில் பிரேமா சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, அவரை புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் போலீசார் கைது செய்து, நன்னடத்தை விதி மீறி செயல்பட்டதாக நேற்று வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து, குற்றச் செயல்களில் ஈடுபடாத நாட்களை கழித்து, பிரேமாவுக்கு 305 நாள் சிறை தண்டனை வழங்கி துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை பிரேமாவை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்….

The post புதுவண்ணாரப்பேட்டையில் நன்னடத்தை விதி மீறிய பெண்ணுக்கு சிறை appeared first on Dinakaran.

Tags : Puduvannarapettai ,Thandaiyarpet ,Puduvannarpettai ,
× RELATED மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட...