×

ஏலக்காய் தோட்ட தொழிலாளர்களின் கதை வஞ்சி

சென்னை: விஆர் கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் மூன்றாவது படம் வஞ்சி. எழுதி இயக்குபவர் ராஜேஷ் சி.ஆர். ஒளிப்பதிவு, பின்சீர். இசை சஜித் சங்கர். எடிட்டர் ஜெயகிருஷ்ணன். ஹீரோ ராஜேஷ், ஹீரோயின் நயீரா நிகார். முக்கிய கதாபாத்திரத்தில் மாஸ்டர் ராஜ நாயகம் நடிக்கிறார். இவர் குங்ஃபூ இந்திய தலைமை பயிற்சியாளராக உள்ளார். நட்டி நடராஜன் நடித்த சமீபத்தில் வெளியான ‘சீசா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

கதை குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, ‘தமிழ்நாடு கேரளா மலைப் பகுதிகளில் ஏலக்காய் தோட்டத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதாரம், வேலை பார்க்கும் மக்களின் பிரச்னைகள், தினந்தோறும் வன விலங்குகளால் ஏற்படுகின்ற மிகவும் மோசமான உயிர் பலிகள் பற்றிய வாழ்வியல் படம் தான் வஞ்சி. இதில் வாழுகிற ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றி தான் கதை. மலைக் காட்டுப் பகுதிகளில் அங்கு வாழ்கிற மக்களோடு ஒரு பெண்ணாக வாழ்ந்து நடித்து மிரட்டிருக்கிறார் ஹீரோயின் நயீரா நிகார். விரைவில் திரைக்கு வர இருக்கிறது’ என்றார்.

Tags : Chennai ,Vimala Rajanayakam ,Combines ,Rajesh C.R. ,Sajith Shankar ,Jayakrishnan ,Hero Rajesh ,Nayira Nikhar ,Master Raja ,
× RELATED சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர...