×

பங்குச் சந்தையில் கிரகங்களின் விளையாட்டு

செவ்வாய் மகா தசை

தசா நாதனாகிய செவ்வாய் சூரியனுடன் இருப்பினும் அல்லது சூரியனின் நட்சத்திரக் காலிலோ அல்லது சூரியனின் பார்வை பெற்று இருந்தால் மருந்துப் பொருள்கள், கண்ணாடிப் பொருட்கள் மீது முதலீடு செய்து முன்னேற்றம் அடையலாம். ஊட்டச்சத்து மிக்க மருத்துவப் பொருட்கள் மீதுமுதலீடு செய்யலாம். திசா நாதனாகிய செவ்வாய், குரு, ராகுவின் சேர்க்கையோ அல்லது பார்வையோ, குரு, ராகுவின் நட்சத்திரக் காலில் இருந்தாலோ உரம், போர்டிங் அண்ட் லாட்ஜிங் பிளாஸ்டிக் பொருள்கள், கெமிக்கல்ஸ், வாட்ச் (கடிகாரம்) போன்ற பொருள்களின் மீது முதலீடு செய்யலாம்.

செவ்வாய், சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றோ சுக்கிரன் அல்லது சனியின் நட்சத்திரக் காலிலோ அல்லது பார்வை பெற்றாலோ (கோழிப் பண்ணை குஞ்சுகள்) மிஷினரி சம்பந்தப்பட்ட பொருள்கள், சினிமா, லெதர் இன்ட்டஸ்டிரீஸ், சிமெண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். ஸ்டீல், காப்பர், டின்வகைகளும்
ஆதாயத்தை அளிக்கும். திசா நாதனாகிய செவ்வாய் சந்திரன், ராகு சேர்க்கை பெற்று அல்லது சந்திரன் அல்லது ராகுவின் நட்சத்திரக் காலில் அமர்ந்தாலோ ஆல்கஹால் போன்ற திரவப் பொருள்கள், பெயிண்ட், இண்டஸ்டிரியல் கேஸ், பெஸ்டிசைட்ஸ் போன்ற பொருள்களில் முதலீடு செய்யலாம்.

திசா நாதனாகிய செவ்வாய், சனி, ராகு சம்பந்தம் பெற்றிருந்தாலும், அல்லது செவ்வாயானவர் சனி அல்லது ராகுவின் நட்சத்திரக் காலில் அமர்ந்தாலும் அல்லது சனி, ராகுவின் பார்வை பெற்றாலும், கடிகாரம், எலக்ட்ரிக்கல் பொருட்கள், பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். திசா நாதனாகிய செவ்வாய் குருவின் பார்வை பெற்றோ, அல்லது குருவுடன் அமர்ந்து அல்லது செவ்வாயானவர் குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்தாலும், விவசாயத்திற்கு தேவையான உரங்கள் மீதும், கெமிக்கல்ஸ் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். திசா நாதனாகிய செவ்வாய் புதனுடன் சேர்ந்து அமர்ந்தாலோ, அல்லது செவ்வாயானவர் புதன் நட்சத்திரக் காலில் அமர்ந்தாலோ பேப்பர், லெதர் இன்டஸ்டீரில், ஹோம் அப்ளையன்ஸ், சிமெண்ட் போன்ற பொருள்களில் மீது முதலீடு செய்யலாம்.
 
ராகு தசை

ராகுமகா தசை ராகு பகவான் ஜனன லக்கனத்திற்கு கேந்திர ஸ்தானத்தில் இருந்தாலும் அல்லது தனித்து வலுப்பெற்று பத்தாமிடத்தோடு தொடர்புகொண்டாலும் பேப்பர், உள்நாட்டு - வெளிநாட்டு வர்த்தகத் தொடர்புகள், ரேடியோ என்சினியரிங் போன்ற பொருள்களின் மீது முதலீடு செய்வது நல்லது. தசாநாதனாகிய ராகு பகவான் சந்திரன், செவ்வாயுடன் சம்பந்தம் பெற்றாலும், அல்லது சந்திரன் அல்லது செவ்வாயின் பார்வையினை பெற்றாலும் அல்லது சந்திரன் அல்லது செவ்வாயின் நட்சத்திரக் காலில் அமர்ந்தாலும் பிளாஸ்டிக், போர்டிங் அண்ட் லாட்ஜிங், ஆல்கஹால் திரவப் பொருள்கள், கடிகாரம் பிரிவெரிஸ், பெஸ்டிசைட்ஸ் போன்ற பொருள்களின் மீது முதலீடு செய்து லாபம் ஈட்ட முடியும்.

ராகு பகவான் சனி சுக்கிரனின் பார்வை பெற்றோ, சுக்கிரனுடன் சனியுடன் அமர்ந்தோ அல்லது சனி அல்லது சுக்கிரனின் நட்சத்திரக் காலிலோ ராகு பகவான் அமர்ந்தாலோ அல்லது சுக்கிரனின் அல்லது சனியின் தசா புக்தி நடைபெறும்போது கம்ப்யூட்டர், சிகரெட், சுகர், கப்பல் துறைகள், போர்டிங் அன்ட் லாட்ஜிங் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். ராகு பகவான் குரு அல்லது புதனுடன் அமர்ந்தோ அல்லது குரு அல்லது புதுனுடைய நட்சத்திரக் காலில் அமர்ந்தோ அல்லது குரு அல்லது புதனின் பார்வை பெற்று அமர்ந்தாலோ பிளாஸ்டிக் சுகர், கெமிக்கல்ஸ் போன்ற பொருள்களில் முதலீடு செய்து முதல்தரமான லாபம் அடையக் கூடும். கம்ப்யூட்டர், போன்றவைகளிலும் முதலீடு செய்யலாம்.

குரு தசை

குரு திசை நடக்கும்காலங்களில்குருபகவான் சுக்கிரன், புதன்இவர்களோடு சம்பந்தம், பார்வை, மற்றும் நட்சத்திரத் தொடர்புகள் பெற்றாலும் அலுவலக அலங்கார பொருள்கள் மீது முதலீடு செய்யலாம். மேலும் குரு பகவான் புதனுடன் சம்மந்தம் பெற்றாலோ, நட்சத்திர தொடர்பு பெற்றாலோ, டெலிபோன் சம்பந்தப்பட்ட துறைகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டலாம். குருபகவான் செவ்வாய் சேர்க்கையோ, அல்லது செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிடம், சித்திரை அவிட்டம் போன்ற பாதங்களில் இருந்தால் ரசாயண சம்மந்தப்பட்ட வகையில் முதலீடு செய்யலாம்.

குரு, செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களில் சேர்க்கை மற்றும் பார்வைகளும் நட்சத்திர தொடர்புகளும் ஏற்படும் பட்சத்தில் பிளாஸ்டிக்சம்பந்தப்பட்ட துறைகளில் முதலீடு செய்யலாம். இதே போன்று குருபகவானும் சுக்கிரபகவானும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெறும் போதும் நட்சத்திர தொடர்பு பெறும்போதும் சுகர் சம்பந்தப்பட்ட துறைகளில் முதலீடு செய்யலாம். இதேபோல் குரு பகவான், சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்களில் சேர்க்கை மற்றும் பார்வைகள் இருப்பின் காபி போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

வியாழன் மற்றும் சுக்கிரன் ஒன்று சேரும் பொழுதோ பார்க்கும் பொழுதோ இந்த தசா - புத்தி காலங்களில் வைர அணிகலன்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் முதலீடு செய்யலாம். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான்தனிச் சிறப்பு பெற்று மேன்மையுடன்விளங்கும் போது, ஜாதகர் எந்த சலனமுமில்லாமல் தைரியமாக நிதி சம்பந்தமுள்ள துறைதனில் முதலீடு செய்யலாம்.

சனி தசை

சனிபகவானும் செவ்வாய் பகவானும், சுக்கிர பகவானும் இணைந்தோ,பார்வை பெற்றோ அல்லது இவர்கள் நட்சத்திரங்கள் தொடர்பு பெற்றோ காணப்படும்போது ஜாதகர் இயந்திரத் துறைகளில் முதலீடு செய்யலாம். சந்திர பகவானுடன் டொர்பு கொண்டு சனி திசை புக்தி காலங்களில் ஜாதகர் பெட்ரோலியப் பொருட்கள், குழாய், உலோகம், லெதர் சம்பந்தப்பட்ட துறைதனில் முதலீடு செய்யலாம். சனீஸ்வரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை, பார்வை, மற்றும் பாதசார, தொடர்புகள் பருத்தி மற்றும் துணி ஆலைகள் போன்றவற்றில் முதலீடு செய்வதைக் குறிக்கிறது. இதே போன்று சனி தசையில் புதன் புக்தி நடைபெறும் பொழுதோ மற்றும் ஜாதகத்தில் சனி பகவான் மற்றும் புதன் சம்பந்தம் பெறும்போது ரப்பர் துறைதனில் முதலீடு செய்யலாம்.

இதே போல் கோழி வளர்ப்பு, குஞ்சுகள் உற்பத்தி சம்பந்தப்பட்ட துறைதனில் முதலீடு செய்ய விரும்புவோர் ஜாதகத்தில் சனி பகவான் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்புகள் இருப்பதைக் காணலாம். குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்ற கம்ப்யூட்டர்துறைதனில் முதலீடு செய்ய விரும்புவோர் சனி தசா புத்தி காலங்களில் சனீஸ்வரனுடன் ராகுவின் தொடர்பு எவ்விதத்திலாவது இருப்பின் தைரியமாக இத்துறைதனில் முதலீடுசெய்யலாம். மிகுந்த வலுவுடன் கூடிய செவ்வாய் பகவானுடன் சனீஸ்வரன் தொடர்பு ஏற்படும் போது இச் ஜாதகர் கட்டிட தளவாடங்கள் மற்றும் மின்சாரத் துறைகள்தனில் முதலீடு செய்யலாம்.
நவ கிரகங்களில் முதல்வன் என்று சொல்லக்கூடிய சூரிய பகவான் சனீஸ்வரனுடன் சம்பந்தம் பெறும்போது மிக நுண்மையான பொருளாகிய கண்ணாடி சம்பந்தப்பட்ட துறைகளில் முதலீடு செய்யலாம்.

(விளையாட்டு தொடரும்)

Tags : planets ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்