×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு கார்த்தி சிதம்பரம் மனு திடீர் வாபஸ்

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நேரடி முதலீடு பெறுவதற்கு, ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் அன்னிய முதலீட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக  சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், சட்ட விரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ்  அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அமலாக்கத் துறையின் வழக்கில் ஜாமீன் அவர் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் விசாரணை நடந்து வரும் நிலையில், தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்கும்படி மற்றொரு மனுவையும் அவர் தாக்கல் செய்தார். இந்நிலையில், முதல் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது. எனவே, 2வதாக தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதற்கு நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, நேற்று இந்த மனுவை அவர் திரும்பப் பெற்றமார். இது குறித்து அவரது வக்கீல் அர்ஷ்தீப் சிங் கூறுகையில், ‘கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணையில் இருப்பதால், கைது செய்வதற்கு தடை கோரி அவர் தாக்கல் செய்த மனுவையும் விசாரிக்க அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, ஜாமீன் மனுவை நீதிமன்றம் விசாரிப்பதற்கு வசதியாக இந்த மனு திரும்ப பெற்று கொள்ளப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார்….

The post ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு கார்த்தி சிதம்பரம் மனு திடீர் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : INX Media ,Karti Chidambaram ,New Delhi ,Union Finance Ministry ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு