×

36 மணி நேரத்தில் 15 கொலைகள் என்பது மிகையான செய்தி: தமிழக காவல் துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் என்பது மிகையான செய்தி என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை: கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில செய்திகள் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 22ம் தேதியன்று 7 கொலைகளும், 23ம் தேதியன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை. மேலும் பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள், தனி நபர்களிடையே உள்ள முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது. 2022ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 940 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2021ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 925 கொலைகளும், 2019ம் ஆண்டில் 1041 கொலைகளும் நிகழ்ந்துள்ளது. ஆகவே முந்தைய 2019ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு 101 கொலை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு  காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post 36 மணி நேரத்தில் 15 கொலைகள் என்பது மிகையான செய்தி: தமிழக காவல் துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Police Department ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வீரப்பன், வீரமணியை என்கவுன்டர்...