திருமலை: பிரபல பாடகி கல்பனா தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நிஜாம்பேட்டையில் உள்ள வெர்டெக்ஸ் பிரிவிலேஜ் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். அவர் சுயநினைவின்றி இருப்பது குறித்து, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக கல்பனாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சைக்கு பிறகு கல்பனாவுக்கு சுயநினைவு திரும்பியதும், போலீசார் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக தெரிகிறது. இருப்பினும், கல்பனாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.