×

கடைசி தோட்ட: விமர்சனம்

தனது வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சோதனைக்கு வரும் தகவலை முன்கூட்டியே அறிந்து பதறும் எம்எல்ஏ, பல கோடி ரூபாயை கொடைக்கானல் சொகுசு விடுதியிலுள்ள அறைகளில் மறைத்து வைக்கிறார். அங்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராதாரவி, ஹனிமூன் கொண்டாட மனைவியுடன் வந்த ஸ்ரீகுமார், மகனுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள மனைவியுடன் வந்த கொட்டாச்சி, பிராங்க் வீடியோ உருவாக்கும் சில நண்பர்கள், கள்ளக்காதலியுடன் வந்த வையாபுரி, தனி நபர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் ஆகியோர் தங்கியிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கு தொடர்பே இல்லாத அபிராமி என்ற இளம்பெண், திடீரென்று சுட்டுக் கொல்லப்படுகிறார். யார் கொலையாளி, அதன் பின்னணி என்ன, அப்பெண் யார் என்பது குறித்து விசாரிக்க போலீஸ் அதிகாரி வனிதா விஜயகுமார் வருகிறார்.

ஆனால், அங்கு நடப்பது வேறொரு கண்ணாமூச்சி ஆட்டம். அது என்ன என்பது கிளைமாக்ஸ். திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ள ராதாரவி, கதையின் நாயகனாக நடித்துள்ளார். வழக்கமான தனது கம்பீரத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். ஸ்ரீஜா ரவி, ஸ்ரீகுமார், வனிதா விஜயகுமார், யாசர், வையாபுரி, வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், கொட்டாச்சி ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையில் ஓரிரு பாடல்கள் கேட்கும் ரகம். மோகன் குமார் ஒளிப்பதிவு சிறப்பு. எடிட்டர் லோகேஸ்வர், காட்சிகளை இன்னும் நறுக்காக வெட்டியிருக்கலாம். ஒரே விடுதியில் கதை நடந்தாலும், படத்தை சஸ்பென்ஸ் குறையாமல் நவீன் குமார் இயக்கியுள்ளார்.

Tags : Kodaikanal ,Radha Ravi ,Sreekumar ,
× RELATED கொடைக்கானல் மலை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து