×

ஒரே படத்தில் இணைந்த சசிகுமார் சத்யராஜ், பரத்

சென்னை: குடும்ப உறவுகளின் வலிமையைச் சொல்லும் படத்தின் மூலம் சசிகுமார், சத்யராஜ், பரத் இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயின்களாக மேகா ஷெட்டி, மாளவிகா அறிமுகமாகின்றனர். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி, ஜோ மல்லூரி நடிக்கின்றனர். எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். சசிகுமார் நடிப்பில் ஹிட்டான ‘சுந்தரபாண்டியன்’, ‘கொடிவீரன்’, ‘அயோத்தி’ ஆகிய படங்களுக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்திருந்தார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எம்.குரு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர், இயக்குனர் இரா.சரவணனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். இணை தயாரிப்பாளராக விஜயகுமாருடன் இணைந்து 30 வருடங்களாக திரைத்துறையில் நிர்வாக தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் பணியாற்றிய தர்மராஜ் வேலுச்சாமி, இப்படத்தை ஜம்பாரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கிறார். வரும் 10ம் தேதி முதல் பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

 

Tags : Sasikumar Sathyaraj ,Bharath ,Chennai ,Sasikumar ,Sathyaraj ,Megha Shetty ,Malavika ,M.S. Bhaskar ,Naren ,Ganja Karuppu ,Indumathi ,Joe Malluri ,S.R. Satish Kumar ,
× RELATED சென்னை வானகரத்தில் லிப்டில் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்..!!