×

தந்தை இறந்த நேரத்திலும் கதாசிரியருக்கு உதவிய பிரபாஸ்: நெகிழ்ச்சி சம்பவம்

ஐதராபாத்: தெலுங்கில் தற்போது விஷ்ணு மன்ச்சு நடிப்பில் மிக பிரமாண்டமான பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது ‘கண்ணப்பா’. இதில் முக்கிய வேடத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதாசிரியராக தெலுங்கு சினிமாவின் பிரபலமான தோட்டா பிரசாத் பணியாற்றியுள்ளார்.

கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பிரபாஸ் நடித்த படத்தில் கதாசிரியராக பணியாற்றிய இவர், மீண்டும் தற்போது பிரபாஸ் உடன் இணைந்து பணியாற்றியது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல பிரபாஸ் தனக்கு செய்த மிகப்பெரிய உதவி ஒன்றையும் அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

“2010ம் வருடம் நான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் மருத்துவ செலவுக்காக மிகப்பெரிய தொகை தேவைப்பட்டது. அந்த சமயத்தில் வேறு யாரிடமிருந்தும் உதவி கிடைக்காத நிலையில் பிரபாஸிடம் உதவி கேட்டு செய்தி அனுப்பினேன். அவர் எனது மருத்துவ செலவிற்கு தேவையான பணத்தையும் மற்ற உதவிகளையும் உடனே அனுப்பி வைத்தார். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அன்றைய தினம் தான் அவரது தந்தை மரணம் அடைந்திருந்தார்.

தனது தந்தையின் இறுதி காரியங்களை கவனித்து வந்த அந்த சோக நிகழ்விலும் கூட என்னை மறக்காமல் என் மருத்துவ செலவுக்கான தொகையை கொடுத்து அனுப்பியதுடன் அது எனக்கு கிடைத்து விட்டதா என்று கேட்டும் உறுதிப்படுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதருடன் உடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது எனது அதிர்ஷ்டம் தான்” என்றும் கூறியுள்ளார் தோட்டா பிரசாத்.

Tags : Prabhas ,Hyderabad ,India ,Vishnu Manchu ,Thotta Prasad ,
× RELATED சிக்கந்தர் தோல்வி எதிரொலி: பிரபாஸ் படத்திலிருந்து ராஷ்மிகா நீக்கம்