×

மாயமான மாணவி சடலமாக மீட்பு

புழல்: புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஹரிப்பிரியா (15), செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று  முன்தினம் காலை ஹரிப்பிரியா நீண்ட நேரம் செல்போன் பார்த்தவாறு விளையாடிக் கொண்டிருந்தாள். அதை பெற்றோர் கண்டித்தனர். இதனால், அச்சிறுமி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றாள். இரவு 8 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குமார் புழல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமியை தேடி வந்தனர்.  இந்நிலையில், நேற்று மதியம் புழல் ஏரி ஜோன்ஸ் டவர் அருகே ஒரு பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேரில் சென்று சடலத்தை மீட்டு, விசாரித்தனர். அதில் சடலமாக கிடந்தது காணாமல் போன ஹரிப்பிரியா என தெரிய வந்தது. இதையடுத்து,  சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post மாயமான மாணவி சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Kumar ,Kavankarai ,Haripriya ,Sengunram Government Girls High School ,Dinakaran ,
× RELATED புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா...