×

504 கிலோ குட்கா பறிமுதல் வியாபாரி கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு சிறு கடைகளுக்கு சில்லறை விற்பனையில் குட்கா சப்ளை செய்யப்படுவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். வியாசர்பாடி 4வது பள்ளத்தெரு பகுதியிலுள்ள ஒரு குடோனில் போலீசார் சோதனை செய்தபோது, 504  கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. அந்த குடோனை வாடகை எடுத்து நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணனை (48) கைது செய்தனர். விசாரணையில், வட மாநிலத்திலிருந்து ரயில் மூலம் குட்கா பொருட்களை பார்சலில் கொண்டு வந்து சிறுசிறு பொட்டலங்களாக பிரித்து பல்வேறு கடைகளுக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணிவண்ணனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post 504 கிலோ குட்கா பறிமுதல் வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Vyasarbati ,Pleyanthopu Sangarbadi ,Kudka ,Dinakaran ,
× RELATED நாய்கள் தொல்லை மாநகராட்சியில் புகார்