×

ஆலத்தூர் ஊராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

திருப்போரூர்:  திருப்போரூரை அடுத்துள்ள ஆலத்தூர் கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு குளுக்கோஸ், ஷாம்பு, உயிர் காக்கும் மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் சுமார் 30க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுக்காற்று, விஷம் கலந்த கழிவுநீர் போன்ற பிரச்னைகள் ஒருபுறமிருக்க தொழிற்சாலைகள் தங்களின் வருவாயில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை சம்பந்தப்பட்ட கிராம வளர்ச்சிக்கும், கிராம மக்களின் வளர்ச்சிக்கும் செலவழிக்க வேண்டும் என்ற விதி இருந்தும் ஓரிரு தொழிற்சாலைகள் தவிர வேறு எந்த தொழிற்சாலையும் தங்களின் கிராம வளர்ச்சிக்காக சல்லிக்காசு கூட செலவழிக்கவில்லை என்று ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புலம்புகின்றனர். இங்குள்ள ரசாயன தொழிற்சாலைகளில் அடிக்கடி தீ விபத்து நடப்பது வாடிக்கையாகி விட்டது. இதுபோன்ற நேரங்களில் சிறுசேரி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், மறைமலைநகர், செங்கல்பட்டு போன்ற இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களை வரவழைக்க வேண்டிய நிலை உள்ளது. விபத்து நடந்தால் உடனடியாக தேவைப்படும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற வசதிகள் எதுவும் சிட்கோ நிர்வாகம் சார்பில் இந்த தொழிற்பேட்டையில் செய்து தரப்படவில்லை. எனவே, ஆலத்தூர் கிராமத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிட்கோ தொழிற்பேட்டை நிர்வாகமும், தொழிற்சாலை கூட்டமைப்பும் இணைந்து இங்கு அவசர சிகிச்சை மையம், ஆம்புலன்ஸ் போன்றவற்றையும், அரசு சார்பில் தீயணைப்பு நிலையத்தையும் அமைக்க வேண்டும் என்று ஆலத்தூர் கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஆலத்தூர் ஊராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aalathur currasi ,Tirupporur ,Alathur ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் – மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை