×

திடீர் `பிரேக் டவுன்’ மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி நின்ற அரசு பஸ்: டிரைவர் சாதுர்யத்தால் 120 பயணிகள் தப்பினர்

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே மலைப்பாதையில் திடீரென பஸ் பிரேக் டவுன் ஆனதால் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. டிரைவரின் சாதுர்யத்தால் 120 பயணிகள் உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செங்கரையில் இருந்து ஆத்தூருக்கு நேற்று காலை 6.30 மணியளில் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் முள்ளுக்குறிச்சி பள்ளியில் படிக்கும் 50 மாணவர்கள் உள்பட 120 பேர் பயணம் செய்தனர். மேல்பூசணி குழிப்பட்டி அருகே மலைப்பகுதியில் பஸ் வளைந்தபோது, திடீரென பிரேக் டவுன் ஆனது. டிரைவர் குணாளன், சாதுர்யமாக பஸ்சை திருப்பி தடுப்பு சுவரில் ேமாதி நிற்கும்படி செய்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  இல்லையென்றால் 50 அடி பள்ளத்தில் பஸ் பின்னோக்கிவந்து கவிழ்ந்து, பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பின்னர் 120 பயணிகளும் மாற்றுப பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். செங்கரை போலீசார், பஸ்சை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். …

The post திடீர் `பிரேக் டவுன்’ மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி நின்ற அரசு பஸ்: டிரைவர் சாதுர்யத்தால் 120 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Saduryat Sendamangalam ,Namkal ,Saduryat ,Dinakaryan ,
× RELATED நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு...