×

இலங்கையில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: இலங்கை திரிகோணமலை, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 8 தமிழர்கள் நேற்று தனுஷ்கோடி வந்தனர். இலங்கை, யாழ்ப்பாணம் சாவடி பகுதியை சேர்ந்த கார்த்திக் (26), ரத்தினம் ரஞ்சித் (59), இதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் கீதாகுமாரி (27), இவரது 6, 2 வயது மகன்கள், திரிகோணமலையை சேர்ந்த ராமன தபிலேந்தகுமாரி (32), இவரது 2 வயது மகள் மற்றும் தலைமன்னார் துறைமுகம் பகுதியை சேர்ந்த சாகுல்ஹமீது (56) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகில் புறப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் தனுஷ்கோடி துறைமுகம் பகுதியில் இவர்களை இறக்கிவிட்ட இலங்கை படகோட்டிகள், திரும்பி விட்டனர். விடியும் வரை கடற்கரையில் காத்திருந்த இலங்கை தமிழர்கள் குறித்து இப்பகுதி மீனவர்கள், மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமேஸ்வரம் மரைன் போலீசார் 3 குழந்தைகள் உட்பட 8 இலங்கை தமிழர்களையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், சாகுல்ஹமீது ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் கடந்த 2015ல் விமானம் மூலம் இலங்கைக்கு சென்று தலைமன்னாரில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் தனியாக விசாரிக்கின்றனர். நேற்று முன்தினமும் 8 பேர் இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தது குறிப்பிடத்தக்கது….

The post இலங்கையில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் தனுஷ்கோடி வருகை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Dhanushkodi ,Trikonamalai ,Jaffna ,
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு