×

குரு பகவான் வழிபாடு - பரிகாரம்

குரு பரிகார ஸ்தலமான  கும்பகோணம் அருகே ஆலங்குடி சென்று வழிபடலாம். அறுபடை வீடுகளில்  அருள்பாலிக்கும் முருகப் பெருமானை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக பழநி  மற்றும் திருச்செந்தூர் சென்று தரிசித்து வழிபடலாம். முருகன் கோயில்களில்  விளங்கேற்ற நெய், எண்ணெய் வாங்கித் தரலாம். அமாவாசை, பௌர்ணமி மற்றும்  வியாழக்கிழமை. தயிர் சாதம், எலுமிச்சம் பழசாதம், தேங்காய் சாதம்,  சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், கொண்டைக் கடலை சுண்டல்,
கடலைப்பருப்பு  சுண்டல் போன்றவற்றை செய்து பக்தர்களுக்கு வழங்கலாம்.

பகவான்  ரமணர், சேஷாத்ரி சுவாமிகள், யோகிராம் சுரத்குமார், ராகவேந்திரர், ஷீரடி  சாய்பாபா, பாம்பன் சுவாமிகள் மற்றும் பல்வேறு மகான்கள், சித்தர்களின்  சமாதிகள், ஆஸ்ரமங்களுக்கு சென்று தியானம் செய்யலாம். திருநெல்வேலி அருகே உள்ள நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமான ஆழ்வார்திருநகரி,  நவ கயிலாயங்களில் குரு அம்சமான முறப்பநாடு கைலாசநாதர், சிவகாமி அம்பாளை  வழிபடலாம்.

சென்னை பாடி அருகே உள்ள திருவலிதாயம் திருக்கோயில் குரு பரிகார ஸ்தலமாகும். தஞ்சை அருகே தென்குடித்திட்டையில் ராஜ குருவாக  அருளும் தலத்தை வழிபட்டால் திருமண, புத்திர பாக்கிய தடைகள் நீங்கும். தேவ குரு, ஞான குரு, அசுர குரு என்று ஏழு விதமான குரு அம்சங்களை தரிசிக்கும் ஒரே தலம் திருச்சி, மணச்சநல்லூரை அடுத்த உத்தமர் கோயில்.  குருவின் அதிதேவதையான பிரம்மாவிற்கு இங்கு தனி சந்நதி உள்ளது.

Tags :
× RELATED சுந்தர வேடம்