×

பிரபல சினிமா இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை: சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி

சென்னை: காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் வெளிவந்த பையா, ஆனந்தம், சண்டகோழி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் தென்னிந்தியாவில் நன்கு அறியப்பட்ட இயக்குனராக லிங்குசாமி உள்ளார். இந்நிலையில் காசோலை மோசடி செய்த வழக்கில் லிங்குசாமிக்கும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போசிற்கும் 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ல் கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த எண்ணி 7 நாள் என்ற படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. இதற்காக, பிவிபி கேபிடல்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து ரூ.1.03 கோடிகடன் பெற்ற இயக்குனர் லிங்குசாமி, அதனை காசோலையாக அளித்துள்ளார். லிங்குசாமி கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை, வங்கிக்கணக்கில்  பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை  நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த 3ஆவது விரைவு நீதிமன்றம், இயக்குநர்  லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.  பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த  வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றம்  பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் லிங்குசாமி  தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post பிரபல சினிமா இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை: சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Lingusamy ,Saithapet Court Action ,Chennai ,Subash Chandra Bose ,Lingusami ,Sainthapad Court Action ,
× RELATED பையா ரீ-ரிலீஸ் மகிழ்ச்சி அளித்திருக்கிறது: கூறுகின்றனர் கார்த்தி, தமன்னா