×

எளாவூர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை; கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ரயில்வே மேம்பாலம் ஒட்டி அரசு மதுபானக்கடை உள்ளது.இந்த கடைக்கு எளாவூர், துரப்பள்ளம், காட்டுக்கொள்ளை மேடு, தலையாரிபாளையம், நரசிங்கபுரம், பெரிய ஒபுளாபுரம், மகாலிங்கம் நகர், எளாவூர் சாலை, மெதிபாளையம், நாசம் பாளையம், மேலக்கழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொத்தனார், கட்டிட உதவியாளர், தனியார் தொழிற்சாலை ஊழியர், விவசாயி, அரசு ஊழியர், மற்றும் இளைஞர்கள் தினந்தோறும் மேற்கண்ட மதுபான கடையில் தங்களுடைய பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் பொழுது மதுபானம் அருந்திவிட்டு செல்வது வழக்கம். ஆனால் டாஸ்மாக் ஊழியர்கள் மது பாட்டிலுக்கு அதிக கட்டணம் மேற்கண்ட கடையில் வசூலிப்பது வழக்கம். தொடர்ந்து தனியார் தொழிற்சாலை வேலை பார்த்து வரும் இளைஞர் ஒருவர் மதுபானம் வாங்க சென்றுள்ளார். அப்பொழுது அவர் வாங்க உள்ள மதுபானத்திற்கு மட்டுமே பணம் வைத்துள்ளார். ஆனால் மதுபான கடை ஊழியர்கள் அடாவடித்தனமாக கூடுதல் பணம் கொடுத்தால் மட்டுமே மதுபாட்டில் வழங்கப்படும் கூறியதாக கூறப்படுகிறது. எனவே இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிக்கு சமுக ஆர்வலர்கள் டாஸ்மாக் கடை உழியர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக மது பாட்டிலை விற்பனை செய்யும் ஊழியரை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்….

The post எளாவூர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை; கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Elavur Tasmak ,Kummippundi ,Gummippundi ,Elavur ,Elavur Tasmac ,Administration ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 5ம்...