×

கொள்ளிடம் அருகே பஸ்ஸில் தொங்கியபடியே ஆபத்தான பயணம்-உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிர வேளூர் கிராமத்திலிருந்து சென்னியநல்லூர்,பெரம்பூர், குன்னம்,கடுக்காய்மரம்,புத்தூர், எருக்கூர்,அரசூர் வழியாக சீர்காழிக்கு தினந்தோறும் தனியார் பஸ் சென்று வந்து கொண்டிருக்கிறது.இந்த பஸ்ஸின் மூலம் சீர்காழி பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றனர். பள்ளி வகுப்புகளுக்கு செல்லும் நேரம் என்பதால் அந்த நேரத்தில் வந்து செல்லும் இந்த தனியார் பஸ்சுக்குள் அதிக கூட்டம் இருந்து வருகிறது.இதனால் மாணவர்கள் பஸ்ஸுக்குள் பயணம் செய்ய முடியாமல் பஸ்ஸில் உள்ள இரண்டு வாசல்களில் உள்ள படிகட்டுகளிலும் பஸ்ஸின் பின்புறம் உள்ள ஏணியிலும் தொங்கியபடி சுமார் 5 முதல் 7 கிலோமீட்டர் தூரம் வரை தினந்தோறும் தொங்கியபடியே பயணம் செய்து வருகின்றனர்.பஸ் வேகமாக செல்லும்போது தவறி விழுந்தால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தும் இதனை உணராமல் இத்தகைய ஆபத்தான பயணத்தை மாணவர்கள் தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக இந்த ஆபத்தான பயணத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கொள்ளிடம் அருகே பஸ்ஸில் தொங்கியபடியே ஆபத்தான பயணம்-உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennyanallur ,Perampur ,Kunnam ,Kuddhayamaram ,Puttur ,Eurur ,Arasur ,Siragazhi ,Mathira Vellur village ,Mayiladudududra District Kootham ,
× RELATED சென்னையில் நான்காவது சம்பவம்;...